×

கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியை விட வெளிநாடுகளுக்கு ராகுல் அதிக முறை பயணம்: பா.ஜனதா குற்றச்சாட்டு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது அமேதி தொகுதிக்கு சென்றதை விட ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு அதிக முறை பயணம் செய்துள்ளார்’’ என பாஜ குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தியானப் பயிற்சிக்காக இந்தோனேஷியா சென்று இருப்பதாகவும் அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜ செய்தி தொடர்பாளர் நரசிம்மா ராவ் கூறுகையில், ``காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளில் உபி.யில் உள்ள தனது அமேதி தொகுதிக்கு சென்றதை விட வெளிநாடுகளுக்கு அதிக முறை சென்றுள்ளார். அவர் 16 முறை வெளிநாடு சென்ற போதிலும் ஒன்பது முறை எந்த நாட்டிற்கு சென்றார் என்பது ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. அதை ஏன் தெரிவிக்கவில்லை? அப்படியானால், அவர் எதுவும் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரா?’’ என கேள்வி எழுப்பினார்.

மேலும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக் காட்டிய அவர், நாடாளுமன்ற விதிகளுக்குட்பட்டு உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றாலும் அதனை தெரிவிக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தி வெளிநாடு சென்றது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை செயலாளருக்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. தியானப் பயிற்சிக்காக உலகமே இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகிறது. ஆனால் இவர் மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்கிறார்’’என்று தெரிவித்தார்.

Tags : Rahul ,Modi ,BJP Overseas ,Janata , Overseas, Rahul, more times, travel, Janata, indictment
× RELATED ஒருமுறை, 2 முறையல்ல 72 முறை பாம்புகள் கடித்தும்உயிர் வாழும் அதிசய மனிதர்