×

ப.சிதம்பரத்தின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்து ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், உடனடியாக அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன்கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கைத், “எய்ம்ஸ் இயக்குனர் உடனடியாக மருத்துவ குழு அமைத்து ப.சிதம்பரத்தின் உடல்நிலைபற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இரைப்பை குடலியல் நிபுணர் நாகேஸ்வர ரெட்டியையும் மருத்துவ குழுவிடம் இடம்பெற செய்து அவரிடமும் கருத்து கேட்க வேண்டும்,”என்று உத்தரவிட்டார்.


Tags : court ,Chidambaram B. Chidambaram , B. Chidambaram, medical report, filing, court, order
× RELATED நீதிமன்ற உத்தரவின் படி அரியர் தேர்வு...