×

டெல்லி ஐஐடி.யில் 250 கோடி திரட்ட முன்னாள் மாணவர் நன்கொடை திட்டம்: ஜனாதிபதி துவக்கி வைத்தார்

புதுடெல்லி: டெல்லி ஐஐடி.க்கு250 கோடி நிதி திரட்டும் முன்னாள் மாணவர்கள் நன்கொடை திட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தொடங்கி வைத்தார். தாங்கள் படித்த நிறுவனங்களுக்கு முன்னாள் மாணவர்கள் நிதி அளிப்பது உலகளாவிய வழக்கமாக இருந்து வருகிறது. இதில் ஹார்வார்டு, யேல், கொலம்பியா பல்கலைக் கழகங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் முதல் முறையாக, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து டெல்லி ஐஐடி முன்னாள் மாணவர்கள் நன்கொடை திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி ஐஐடி.க்கு 250 கோடி நிதி திரட்டும் முன்னாள் மாணவர் நன்கொடை திட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ராஷ்டிரபதி பவனில் தொடங்கி வைத்தார். முதலில் 255 கோடிக்கு தொடங்கும் இந்த நன்கொடை திட்டம், வரும் 2020ம்  ஆண்டில் 1,000 கோடியாகவும் 2025ம் ஆண்டில் 7,000 கோடியாகவும் படிப்படியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் மாணவர்கள் அமைப்பினர்  தெரிவித்தனர்.


Tags : President ,IIT Delhi ,alumni ,Delhi , Delhi, IIT, inaugurates Rs 250 crore, alumni, donation program, President
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...