×

ரத்த புற்றுநோயால் பாதித்தவரின் கனவு நிறைவேறியது: ஒரு நாள் போலீஸ் கமிஷனரான இன்டர்மீடியட் மாணவி: தெலங்கானாவில் நெகிழ்ச்சி

திருமலை: ரத்த புற்றுநோயால் பாதித்த மாணவியின் போலீஸ் கமிஷனர் ஆசை நிறைவேறி உள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையினர் தீர்க்கமுடியாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் கனவுகளை நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி பழைய அல்வால் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மா. இவரது மனைவி பத்மா. இவர்களது மகள் ரம்யா (17), இன்டர்மீடியட் 2ம் ஆண்டு படித்து வருகிறார். ரம்யா ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரம்யாவுக்கு போலீஸ் கமிஷனராக பணிபுரிய வேண்டும் என்று கனவு இருந்து வருவதாக, ராட்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத்திடம் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி ரம்யாவுக்கு கமிஷனருக்கான சீருடை பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இதையடுத்து ராட்சகொண்டா கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒருநாள் போலீஸ் கமிஷனராக ரம்யா பதவி ஏற்றார். அவருக்கு கமிஷனர் மகேஷ் பகவத்  பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ரம்யா  ஏற்றுக்ெகாண்டார். பின்னர்  சட்டம் ஒழுங்கு சீர் குலையாமல் பாதுகாக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தனிப்படையை மேலும் மேம்படுத்த வேண்டும் என  காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.


Tags : Blood cancer victim ,Telangana ,police commissioner ,student ,victim , Blood cancer, victim's dream, fulfilled, in Telangana, elasticity
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...