×

எடியூரப்பாவுக்கு கர்நாடக இடைத்தேர்தல் பொறுப்பு: பாஜ மேலிடம் திடீர் முடிவு

பெங்களூரு: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்தே கர்நாடகாவில் டிசம்பர் மாதம் நடக்க  உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் பொறுப்புகளை எடியூரப்பாவிடம் அளிப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பதென பாஜ மேலிடம் முடிவு செய்திருந்தது. ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய சட்டப்பேரவை தேர்தல்  முடிவு என்பது பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் வகையில் அமைந்தது.  இதனால், எடியூரப்பா விவகாரத்தில் மேற்கொள்ள இருந்த முடிவை பாஜ மேலிட தலைவர்கள் மாற்றிக்கொண்டனர்.

அதன்படி, கர்நாடகாவில் டிசம்பர் 5ம் தேதி  நடக்க உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலை எதிர்கொள்வது, யாருக்கு டிக்கெட் கொடுப்பது என்பன போன்ற முக்கிய முடிவுகள் எடுக்க எடியூரப்பாவுக்கு முழு  அதிகாரம் வழங்க பாஜ மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி முதல்வர் எடியூரப்பா தான் ஆட்சி அமைக்க உதவிய  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் டிக்கெட் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல, மஜத-காங்கிரஸ் கட்சிகளை விட முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்க எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன்படி நிவாரண பணிகளை விரைந்து முடித்துவிட்டு உடனே பிரசாரத்தை தொடங்கவும் தீர்மானித்துள்ளார்.

Tags : Karnataka ,Yeddyurappa ,demise , Yeddyurappa, Karnataka by-election, responsible
× RELATED கர்நாடக பாஜவில் கோஷ்டி மோதல் மகனுக்கு...