×

பாஜ அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது : மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி குற்றச்சாட்டு

பெங்களூரு: பாஜ அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது என மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.பெங்களூரு மாநகராட்சி கவுன்சில் கட்டிடத்தின் முன்பு காங்கிரஸ் கவுன்சிலர்கள்,  எம்எல்ஏ சவும்யாரெட்டி ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி ஆர்ப்பாட்டத்தின் போது பேசியதாவது:பாஜ அரசு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ரத்து செய்துள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளுக்கான ஜாப் கோடு வழங்கப்பட்ட பிறகு பாஜ அரசு இவ்விதம் நடந்து கொண்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது அமைச்சரவையில் அனுமதி அளித்த வளர்ச்சி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இதை பழிவாங்கும் அரசியல் என்று கூறுவதை விட வேறு எப்படி அழைக்க முடியும்?  பாஜ ஆட்சியின்போது அக்கட்சி உறுப்பினர்கள் தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்குவதில் தவறு கிடையாது. ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு நிதி ஒதுக்குவதை குறைகூற முடியாது. அதே நேரம்  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ரத்து செய்வது எந்த வகையில் நியாயம் ? பெங்களூருவிலுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு மொத்தம் ரூ.941 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜ எம்எல்ஏக்கள் 11 பேர்களின் தொகுதிக்கு ரூ.3500 கோடி பாஜ ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாஜி எம்எல்ஏக்கள் 5 பேர்களின் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட  நிதி எவ்வளவு தெரியுமா? ரூ.2750 கோடி. பாஜ ஆட்சியில் அக்கட்சி எம்எல்ஏக்களுக்கு எத்தனை ஆயிரம் கோடி என்றாலும் ஒதுக்கி கொள்ளுங்கள். அதை கேட்க விரும்பவில்லை. அதே நேரம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ரத்து செய்வதைதான் ஏன் என கேட்கிறோம. 2008ல் மத்தியிலும் மாநகராட்சியிலும் பாஜ நிர்வாகம் செய்தபோது பெங்களூருவில் குப்பை பிரச்னை மிகப்பெரியதாக மாறியது. அதற்கு பிறகு சித்தராமையா தலைமையிலான அரசு பெங்களூருவுக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கியது. தற்போது மறுபடியும் அதே நிலைக்கு பெங்களூரு திரும்பியுள்ளது என்றார்.

Tags : government ,Baja ,Maj ,Ramalingareddy , Baja Government ,revenge politics,Minister ,Ramalingareddy
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...