×

கங்காராம் அரசு மருத்துவமனை டாக்டர் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியராக நியமனம்

புதுடெல்லி: கங்காராம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கங்காராம் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையின் சி.டி மற்றும் எம்ஆர்ஐ சிகிச்சை பிரிவின் தலைவரான டாக்டர் டி பி எஸ் பக்ஸி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை பள்ளியில் ‘இமேஜிங் சைன்ஸஸ்’ மருத்துவ பிரிவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.கங்காராம் மருத்துவமனையில் தொடர்ந்து பணிபுரிய உள்ள பக்‌ஷி, சிறப்பு பேராசிரியராக ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்திற்கும் சென்று மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளார்.அமெரிக்காவில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு, கதிரியக்கப் பிரிவில் கல்வி பயிற்சி அளிக்க இந்திய டாக்டர் ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Tags : American University Professor Appointed ,Kangarum Government Hospital ,Government ,Hospital Doctor American University ,Gangaram , Government , Gangaram, Hospital Doctor, American University,
× RELATED திருச்சி அருகே காவிரியில் மூழ்கி பேராசிரியர், சிறுவன் பலி; 2 பேர் மாயம்