தங்கம் விலை ஏற்றம்

புதுடெல்லி:  டெல்லியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றத்துடன் வர்த்தை நிறைவு செய்தது. உலகளவிலான சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு போன்ற காரணங்களால் தங்கத்துக்கான கிராக்கி கூடியது. நேற்று தலைநகர் டெல்லியில் 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 115 அதிகரித்து 39,017க்கு விற்கப்பட்டது.தொழில் துறையினரின் ஆர்வம் காரணமாக   முந்தைய வர்த்தகத்தின் முடிவில் ஒரு கிலோ 47,395 ஆக இருந்த வெள்ளி விலையும் ஒரு கிலோ 95 அதிகரித்து 47,490 ஆக விற்பனையானது.

Tags : Gold, Price ,rise
× RELATED காஸ் சிலிண்டர் விலை 18 உயர்வு