×

சிறுமி கொலை வழக்கில் உறவினர் கைது,..சொத்து கிடைக்க வேண்டும் என்பதால் கொலை செய்தேன்: பரபரப்பு வாக்குமூலம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வேதவல்லி (50). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.  இவருக்கு பாபு (26), மாதவன் (22) என  2 மகன்கள் உள்ளனர். வேதவல்லியின் தம்பி பூபதிக்கு    மோனிஷா, ஷோபனா என்ற 2 மகள்கள் இருந்தனர்.  பூபதி, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு  இறந்ததால், அவரது 2 வயது  பெண் குழந்தை ஷோபனாவை மட்டும்  வேதவல்லி எடுத்து வளர்த்து வந்தார். இந்நிலையில், பாபு திருமணம்  செய்து  கொண்டு தனது மனைவி குழந்தைகளுடன்  கிண்டி  ஈக்காட்டுத்தாங்கலில் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், அடிக்கடி ஆதம்பாக்கம் வந்து தனது  தாயாரிடம், என் பிள்ளைகளை நீங்கள் கவனிப்பதில்லை. ஆனால்  தம்பி மகள் ஷோபனாவை மட்டும் நல்லா கவனிக்கிறீங்க, இது நியாயமில்லை  என்று தகராறு செய்துள்ளார். மேலும் பணம், நகையை பறித்து செல்வதுடன், வீட்டை விற்று பணம் தரும்படியும் மிரட்டியுள்ளார்.

நேற்று முன்தினம்  வேதவல்லி வேலைக்கு சென்றிருந்த நிலையில்  அயனாவரத்தில் உள்ள மோனிஷா தனது தங்கையை பார்ப்பதற்காக ஆதம்பாக்கம்  வீட்டிற்கு வந்தபோது, ஷோபனா ரத்த  வெள்ளத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து   கிடப்பதை கண்டு அதிர்ச்சி  அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, வேதவல்லியின்  முத்த மகன் பாபுதான், வேதவல்லி வீட்டுலிருந்து கோபமாக வெளியேறி சென்றதாக   அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து,  அயனாவரத்தில் பதுங்கி இருந்த பாபுவை போலீசார் கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.  அப்போது பாபு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,     “ தனது தம்பி மகள் ஷோபனாவை என் தாயார்  சிறுவயது  முதல் பாசத்துடன்  வளர்த்து வந்தார்.  இது எனக்கு பிடிக்கவில்லை.

வீட்டை விற்று எனது பங்கை  பிரித்துகொடு என என் தாயாரிடம் கேட்டபோது,  அது நமது சொத்து இல்லை. அது ஷோபனா குடும்பத்து சொத்து என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஷோபனா உயிருடன் இருந்தால் தானே வீடு  அவளுக்கு போய் சேரும். ஆகவே அவளை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். அதன்படி நேற்று முன்தினம்  என் தாயார் வேலைக்கு சென்றபின்  வீட்டிற்குள் நுழைந்து, ஷோபனாவை கொலை செய்தேன். ஆனால் ஷோபனாவை சத்தியமாக   பலாத்காரம் செய்யவில்லை” என  கூறினார்.  ஆனால் போலீசாரோ பலாத்காரம் சம்பந்தமாக அவன் கூறியதை நம்பவில்லை. பிரேத பரிசோதணை அறிக்கை வந்த பின்பு தான் உண்மை தெரியவரும் என்றனர்.  தொடர்ந்து பாபுவிடம்   ஆதம்பாக்கம் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Relatives ,Relative , Little girl murder case, relative arrest, property, murder
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...