×

கஞ்சா விற்பனையில் தகராறு பீர்பாட்டிலை தலையில் உடைத்து வாலிபரை கொல்ல முயற்சி: 2 ரவுடிகள் கைது

சென்னை: கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலை தலையில் உடைத்து வாலிபரை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை மூலக்கடை சலாம் நகரை சேர்ந்தவர் இர்பான் (25). இவர் கஞ்சா  விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கஞ்சா விற்பனையில் ரவுடிகளான பிரகாஷ் மற்றும் வாந்தி (எ) வாஞ்சிநாதன் ஆகியோருக்கும், இர்பானுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல் ேநற்று  முன்தினம் இரவு இர்பான், பீட்டர்ஸ் சாலையில் காஞ்சா விற்பனை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவுடிகள் பிரகாஷ் மற்றும் வாஞ்சிநாதன், ‘‘எங்கள் பகுதியில் நீ எப்படி கஞ்சா விற்பனை செய்யலாம்,’’ என்று மிரட்டினர். பின்னர், அங்கு  கிடந்த பீர்பாட்டிலை எடுத்து இர்பான் தலையில் அடித்து உடைத்தனர்.

அதோடு நில்லாமல் இர்பானை கீழே தள்ளி வலது கால் மீது பெரிய கல்லை போட்டு காலை முறித்துள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் இர்பான் அலறினான். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்து, இருவரும்  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து அண்ணாசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த இர்பானை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய  ரவுடிகளான பிரகாஷ் மற்றும் வாந்தி (எ) வாஞ்சிநாதனை கைது செய்தனர்.

Tags : Birbattil , Cannabis sales, youth, 2 kills, attempt to kill
× RELATED கஞ்சா விற்பனையில் தகராறு...