×

டெல்லியில் போட்டி :கங்குலி உறுதி

இந்தியா - வங்கதேசம் மோதும் டி20 போட்டி நவ.3ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளி பட்டாசுகளால் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக டெல்லியில் போட்டி நடத்த வேண்டுமா என்று எதிர்ப்புகள்  எழுந்துள்ளன. அதற்கு ஏற்ப முன்னாள் வீரரும், பாஜ எம்பியுமான கவுதம் கம்பீர், ‘கிரிக்கெட் போட்டியை விட காற்று மாசை சமாளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்’  என்றார். அதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம்  அதிகரித்தது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘ டெல்லியில் திட்டமிட்டபடி முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறும். அதில் மாற்றமில்லை’ என்று நேற்று தெரிவித்துள்ளார்.

Tags : Match ,Delhi ,Ganguly , India, Bangladesh, Ganguly
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக்...