×

பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் 3வது சுற்றில் ரபேல் நாடல்

பாரீஸ்: பாரீசில் நடைபெறும் மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின்  ரபேல் நாடல்  காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் உலகின் 43ம் நிலை  வீரர் பிரான்சின் ஆட்ரின் மன்னாரினாவை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்றது. முன்னதாக 2வது சுற்று ஒன்றில் உலகின்  முதல் நிலை வீரரான செர்பியாவின்  நோவக் டிஜோகோவிக் 7-6, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் 97ம் நிலை வீரர் பிரான்சின் கோரென்டின் மவுடட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். இந்த போட்டி ஒரு மணி 46  நிமிடங்கள் நீடித்தது.   டிஜோகோவிக் 3வது சுற்றில் இங்கிலாந்தின் கெயில் எட்மண்டடையும், நாடல் 3வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்காவையும் எதிர்த்து விளையாட உள்ளனர்.

Tags : round ,Rafael Nadal , Rafael Nadal , Paris Master Tennis
× RELATED கிராம புறங்களில் உள்ள மருத்துவமனைகளை...