×

அன்னிய முதலீடு அதிகரிப்பால் ஏற்றத்தில் சென்செக்ஸ், நிப்டி முதலீட்டாளர்கள் உற்சாகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) நேற்றைய வர்த்தகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 40,392 புள்ளிகளைத் தொட்டது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையும் (நிப்டி) ஏற்றம் பெற்றது. பங்குகள் விலை உயர்ந்து மொத்தம்  11.900 புள்ளிகளை எட்டியது. கடந்த ஜூன் 3ம் தேதியிலிருந்து கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு உச்சத்தைப் பெற்றது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பங்குச்சந்தையில் அன்னிய முதலீடு அதிகரித்ததைத்  தொடர்ந்து வர்த்தகம் ஏற்றம் பெற்றது. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 340 புள்ளிகள் அதிகரித்து மொத்தம் 40,392 புள்ளிகளைத் தொட்டது. அதேபோல், நிப்டியிலும் வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்தது. இதனால், மொத்தம்  11,900 புள்ளிகளை எட்டியது.

பங்குச்சந்தை தற்போது ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த ஜூன் 3ம் தேதி சென்செக்ஸ் மொத்தம் 40,268 புள்ளிகளைத் தொட்டதது தான் அதிகபட்சமாக இருந்தது. அதன் பிறகு தற்போதுதான் உச்சபட்சமாக உயர்ந்துள்ளது. உள்ளநாட்டு மற்றும்  அன்னிய முதலீட்டாளர்கள் ஆர்வமாக பங்குகளை வாங்கியதால் தொடர்ந்து 5 வர்த்தக நாட்களில்  முன்னேற்றம் ஏற்பட்டது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த புதன்கிழமையன்று மொத்தம் ரூ.7,192.42 கோடி அளவுக்கு முதலீடு  செய்தனர். அதேவேளையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ரூ.185.87 கோடி அளவுக்கு பங்குகளை விற்றனர். இதனால் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.

வரிச்சலுகை அளிக்கலாம் என்ற எதிர்பார்பார்ப்பு நிலவுகிறது. இதுவும் பங்குச்சந்தையில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் பெற காரணமாக அமைநத்து. அமெரிக்காவில் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தும் வகையில்  பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக கடந்த புதனன்று வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் கவனம் இந்திய பங்குச்சந்தையில் திரும்பியது.மேலும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள்  நம்பிக்கை அளிப்பதாக இருப்பதால் முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுவும் பங்குச்சந்தை ஏற்றம் பெற காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். நேற்றைய தினம் வ்ர்த்தக முடிவில் சென்செக்ஸ் 77.18 புள்ளிகள்  அதிகரித்து மொத்தம் 40,129.05 என்ற அளவில் நிலை பெற்றது. அதேபோல், நிப்டி 33.35 புள்ளிகள் அதகிரத்து மொத்தம் 11,877.45 புள்ளிகளில் நிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Nifty ,investors ,Sensex , FIIs, Sensex, Nifty, investors
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...