×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான தர்மபுரி மாணவிக்கு ஜாமீன் தாயின் மனு தள்ளுபடி

மதுரை: நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கைதான தர்மபுரி மாணவிக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் மதுரை கிளை, அவரது தாயின் மனுவை தள்ளுபடி செய்தது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்கைக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதைத் தொடர்ந்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவீன் (21), இவரது தந்தை சரவணன் (44),  ராகுல் (20), இவரது தந்தை டேவிட் (47) மற்றும் தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் அருகே உள்ள மூங்கிலான்கோட்டையை சேர்ந்த மாணவி பிரியங்கா. இவரது தாய் மைனாவதி, தர்மபுரியை சேர்ந்த மாணவர் இர்பான், இவரது தந்தை முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்குகளில் ஏற்கனவே உதித்சூர்யா உள்ளிட்ட 3 மாணவர்கள் ஜாமீன் பெற்றுள்ளனர். இவர்களது தந்ைதயர் தாக்கல் செய்த ஜாமீன்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தர்மபுரி மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மாணவி பிரியங்காவுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும், மைனாவதி போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.


Tags : Dharmapuri ,student ,NEET ,impersonation , Dharmapuri student arrested , NEET impersonation case ,dismissed
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...