×

உல்லாசத்தின்போது அழுது இடையூறு செய்ததால் ஆத்திரம் இரண்டரை மாத குழந்தையை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன் கைது

* கள்ளஉறவால் கணவனை பிரிந்த இளம்பெண் ஆதரவற்று வீதிக்கு வந்து தவிக்கும் அவலம்
* கே.கே. நகரில் பரபரப்பு சம்பவம்

சென்னை: உல்லாசத்தின் போது அழுது இடையூறு செய்ததால் இரண்டரை மாத பெண் குழந்தையை தந்தையே அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கள்ள உறவால் முதல் கணவனை பிரிந்து வந்த இளம்பெண், தற்போது ஆதரவற்ற நிலையில் வீதிக்கு வந்துள்ளார். இந்த சம்பவம் கே.கே.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் துர்கா (25). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஜான்குமார் (5) என்ற மகனும், ஜெனிபர் (4) என்ற மகளும் உள்ளனர்.இதற்கிடையே கே.ேக.நகர் டாக்டர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளியான எல்லப்பன் (27) என்பவருடன் துர்காவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஆறுமுகம் வேலைக்கு சென்றதும் எல்லப்பன், துர்கா வீட்டிற்கு வந்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் ஆறுமுகத்திற்கு தெரியவந்தது. எல்லப்பன் உடனான கள்ளக்காதலை கைவிட வேண்டும் என்று பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், துர்கா கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் துர்கா தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவனை விட்டு விட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஓடி வந்துவிட்டார்.

அதன்பிறகு கள்ளக்காதலனுடன் துர்கா தற்போது டாக்டர் அம்பேத்கர் காலனியில் வசித்து வருகிறார். கள்ளக்காதலன் உறவால் துர்காவுக்கு மது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் துர்கா கள்ளக்காதலனுடன் சேர்ந்து தினமும் மது அருந்திவிட்டு ஒன்றாக தூங்குவது வழக்கம். இதற்கிடையே துர்காவுக்கு கள்ளக்காதலனால் ராஜ்மாதா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் துர்கா நெருக்கமாக இருப்பதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் எல்லப்பன், தன்னுடன் நெருக்கமாக இருக்க வர மறுத்ததால் குழந்தையை அடித்து தனது காரியத்தை சாதித்து வந்துள்ளார். இந்நிலையில், ேநற்று அதிகாலை துர்கா குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன், உடனே துர்காவிடம் இருந்த குழந்தையை வலுக்கட்டாயமாக பிடுங்கி தரையில் போட்டுவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார். பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை மீண்டும் பசியால் அழுது துடித்துள்ளது. இதனால் துர்கா குழந்தைக்கு பால் கொடுக்க காதலனிடம் இருந்து விலக முற்பட்டார். உடனே, ஆத்திரமடைந்த எல்லப்பன் இரண்டரை மாத குழந்தை ராஜ்மாதாவை தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் குழந்தைக்கு மூக்கு வழியாக ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடியது. அப்போதும் துர்காவை குழந்தையை தூக்க விடாமல் தடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். பிறகு துர்கா குழந்தையை பார்த்த போது மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த துர்கா உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு  தூக்கி சென்று டாக்டர்களிடம் காட்டியுள்ளார். டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதை கேட்டு துர்கா மருத்துவமனை வளாகத்திலேயே அழுது துடித்தார். பிறகு சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து துர்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை அடித்து கொன்ற தந்தை எல்லப்பனை கைது செய்தனர். உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு முதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிவந்த துர்கா, தற்போது எந்தவித ஆதரவுமின்றி தவித்து வருகிறார். உல்லாசத்திற்காக தனது இரண்டரை மாத பெண் குழந்தையை தந்தையை அடித்து கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : infant , Arrested , raping,
× RELATED கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை