×

மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக்கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ், நன்னடத்தை சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கொடுங்கோன்மை.

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல் நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : state ,doctors ,Government ,Mk Stalin , Government to fulfill , demands of the doctors, assertion of Mk Stalin
× RELATED மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம்