×

பெரம்பலூரில் கேட்பாரற்று கிடக்கும் இங்கிலாந்து மன்னரின் கல்வெட்டு

பெரம்பலூர்: பெரம்பலூரில் அமைந்துள்ள தெப்பக்குளத்திற்கு 108 ஆண்டுகளுக்கு முன்பு, குடிநீர் ஆதாரத்திற்காக பெரம்பலூர் நகரின் மேற்குப் பகுதியிலுள்ள பச்சை மலையிலிருந்து பெய்கிற மழைநீரை வாய்க்கால் அமைத்து கொண்டு வந்து  சேர்த்தனர். அந்த தெப்பக் குளத்தில் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் நடக்கும் அளவிற்கு மழை நீர் நிறைந்து, வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தெப்பக்குளத்திற்கு நீர் கொண்டுசென்ற வாய்க்காலுக்கு “ஜார்ஜ் வாய்க்கால்” என்று பெயர். பெரம்பலூர்-துறையூர் சாலையில் அரணாரை கைகாட்டிக்கு நேர் வடக்கிலிருந்து கால்வாய் அமைத்து, துறையூர் சாலை வழியாக, பெரம்பலூர் அரசு  மருத்துமனை எதிரில் பாய்ந்து, தற்போதுள்ள தெப்பக் குளத்தின் வடமேற்கு மூலையில் வரத்து வழியாக தண்ணீர் செல்லும்படி இந்த வாய்க்கால் அமைந்து இருந்தது.

ஆனால் நாளடைவில் இந்த வாய்க்கால் காணாமல் போனது. ஆனால்  வாய்க்கால் இருந்ததற்கு சான்றாக நூறாண்டு பழமையான கல்வெட்டு சாலையோரத்தில் கிடக்கிறது. அந்த கல்வெட்டில் இங்கிலாந்து நாட்டு அரசின் ஆளுகை குறியீடும், ஜார்ஜ் கென்னல் என்று ஆங்கிலத்திலும், 1911 டிசம்பர் 12ம் தேதியென்றும், அதற்கு கீழே தமிழில் ‘ஜார்ஜ் வாய்க்கால்’ என்றும் குறிக்கப்பட்டு உள்ளது. ஜார்ஜ் வாய்க்கால் என்ற  பெயர் அப்போது இங்கிலாந்தின் பேரரசராக பதவிவகித்த 5ம் ஜார்ஜ் மன்னரின் ஆளுகையை குறிக்கும் வகையில் அப்போது வெட்டப்பட்ட கால்வாய்க்கு நினைவாக கல்வெட்டு நட்டுவைக்க ப்பட்டது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்த கல்வெடடு பாதுகாக்கப் படவில்லை.

கடந்த 2015ம் ஆண் டில் ‘பொதுநீர்’ அமைப்பினர் இந்த கல்வெட்டினை மீட்டு எடுத்து, தூய்மை படு த்தி மீண்டும் நட்டுவைத் தனர். ஜார்ஜ் வாய்க்காலினை காணவில்லை என்று கைகளில் விளக்கு ஏந்தி தேடினர். அப்போது மாவட்ட கலெக்டராக  இருந்த தரேஷ் அகமது, நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். பொ துப்பணித்துறை, வருவாய் த்துறை, நகராட்சி,ஊரகவ ளர்ச்சித்துறை ஆகியோ ரோடு கலந்து ஆலோசனை மேற்கொண்டார். அவருக்கு ப்பிறகு அந்த நடவடிக் கை  தொடரப்படவில்லை. தற்போது பெரம்பலூர்-துறையூர் சாலை விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜார்ஜ் வாய்க்கால் கல்வெட்டு பிடுங்கி எறியப்பட்டுள்ளது. எனவே ஜார்ஜ் வாய்க்காலை மீட்டு கல்வெட்டை நட வேண்டும் என மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : King ,England ,Perambalur , Inscription of the King of England in Perambalur
× RELATED கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா