×

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்புமாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கெடு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்புமாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கெடு விதித்துள்ளார். மேலும் 60க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பணியிட மாறுதல் உடனே கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலூர், திருப்பூர், விழுப்புரம், நெல்லை, ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திருப்பியதாக அவர் கூறினார். மேலும் புதிய மருத்துவர்களின் நியமனத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுக்கத்தயங்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1765 ஆரம்ப சுகாதார  நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில் 18,070 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அரசு  டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம்  தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை டாக்டர்கள் தொடங்கினர்.

ஏழாவது நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.சென்னை மருத்துவ கல்லூரி டீன் உள்ளிட்டோர் மூலம் இந்த பிரேக் இன் நோட்டீஸானது வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை, ரமா, சுரேஷ், முகமது அலி, பாலாமணிகண்டனை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்வதோ, பணி நீக்கம்  செய்வதோ அரசின் நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளார். 16,475 மருத்துவர்களில் 2,523 பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,160 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக கூறினார். இதையடுத்து எஞ்சிய மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் கெடு வைத்துள்ளார். வேளைக்கு திரும்ப எண்ணுவோர் நாளை பணியில் சேரலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Minister C Vijayabaskar , Interview with Government Doctors, Struggle and Minister Vijayabaskar
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...