×

ஊரகவளர்ச்சி துறை சார்பாக ரூ.550 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ரூ.550 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளின் திறப்பு விழா மற்றும் ரூ.112.62 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதேபோல ஊரக வளர்ச்சித்துறையில் 555 பேருக்கு பணி நியமன ஆணையும் வழங்கினார். அதில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 69 பேருக்கும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 138 பேருக்கும், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 61 பேருக்கும், ஊரக வளா்ச்சித் துறை சார்பில் 11 பேருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.150 கோடி வாங்கி கடன் திட்டத்தை துவக்கி வைத்தார். அதுமட்டுமல்லாது, பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி ஊக்கத் தொகையும், 100 சதவீதம் தோ்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களுக்கு ஊக்கத் தொகையும் முதல்வா் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட துறை சார்ந்த அமைச்சர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடக்கி வைத்தபின், உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களை பொறுத்தவரை எந்தவித கோப்புகளும் தேக்கத்தில் வைக்காமல் கையொப்பம் இட்டு, செயல்படுத்தக்கூடிய பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Tags : Edappadi Palanisamy ,Rural Development Department , Rural Development, New Schemes, Madras, Chief Minister Palanisamy, Foundation
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...