×

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள 'மகா புயல்'தீவிர புயலாக மாறியுள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மகா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நவம்பர் 4ம் தேதி வரை அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத் தாழ்வு நிலை  காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப் பெற்றுள்ளது. இதனால் குமரி கடல் முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து  இருந்தது. அரபிக்கடலில் ஏற்கனவே கியார் புயல் நிலைகொண்டிருக்க கூடிய நிலையில் புதிய புயல் சின்னம் உருவாகி இருந்ததாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதற்கு மகா என பெயரிடப்பட்டது.

மேலும், 23 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மகா புயல் தீவிர புயலாக மாறியிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல் அளித்துள்ளார். புயல் காரணமாக மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, நவம்பர் 4ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும் தெற்கு தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மகா புயல் ஓமனை நோக்கி நகர்ந்து செல்லும் எனவே கடல் சீற்றம் அதிகம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Great Storm ,storm ,Arabian Sea The Great Storm ,Arabian Sea ,Weather Center , Arabian Sea, MAHA Storm, Fishermen, Warning, Meteorological Center
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...