×

காரைக்காலில் ஒரே நாளில் 44 மி.மீ மழை: சாலைகளில் தேங்கும் நீரால் மக்கள் அவதி

காரைக்கால்: குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு ஒட்டிய பகுதியில் நிலவிய தாழ்வு பகுதி வடமேற்காக நகர்ந்து லட்சதீவு அருகே  தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று நீடிக்கிறது. இதனால் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிரவி, திருப்பட்டினம், திருநள்ளாறு உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. காரைக்கால் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 43.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை, கென்னடியார் வீதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீருடன் சாக்கடையும் கலந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். முக்கிய சாலையான காமராஜர் சாலையில் மழை பெய்யும் நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதாலும், அது சாக்கடை நீருடன் கலந்து நிற்பதாலும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.  இதனை கண்காணித்து அரசு அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Karaikal , Karaikal, rain
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...