×

மதுரை அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். தொட்டப்பநாயக்கனுரில் கருப்பையா என்பவரது தேனீர் கடையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. சிலிண்டர் வெடித்ததில் கருப்பையா அவரது 6 வயது மகள் ஹேமலதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Tags : Madurai Madurai , Cylinder, cylinder,
× RELATED சென்னையில் வீடுகளில்...