×

பெரிய வெண்மணி கிராமத்தில் 6 ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் கிடக்கும் அவலம்: கலெக்டருக்கு புகார்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பெரிய வெண்மணி கிராமத்தில் 6 ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருக்கிறது என்று கலெக்டருக்க வாட்ஸ்ஆப்பில் சமூக ஆர்வலர் புகார் மனு அனுப்பினார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரிய வெண்மணி கிராமத்தில் உள்ள உடையான் சாலை அருகே 6க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மோட்டார் பைப் இல்லாமல் மூடாமல் திறந்த வெளியில் கிடக்கின்றன. அதேபோல் பெரிய வெண்மணியில் சுடுகாடு அருகே குடிநீருக்காக போடப்பட்ட ஆழ்குழாய் கிணறு ஒன்று பழுதின் காரணமாக செயல்படாமல் போடப்பட்ட குழாய் மூடப்படாமல் திறந்த வெளியில் இருக்கின்றன. மேலும் பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல், புதுக்குடிசை, சின்ன வெண்மணி காலனி, சின்ன வெண்மணி ஆகிய பகுதிகளிலும் மூடி இல்லாமல் திறந்த வெளியில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகள் ஏராளமாக இருக்கின்றன.

ஒரு கிராமத்திலே இத்தனை ஆழ்குழாய் என்றால் இதர ஊராட்சிகளில் எத்தனை குழாய்கள் இருக்கும் என்று தெரியவில்லை. இத்தனை குழாய்களும் பெரிய வெண்மணி ஊராட்சியால் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளாகும். இத்தனை ஆழ்குழாய் கிணறுகள் மோட்டார் இல்லாமல், மூடி இல்லாமல் வெறும் குழாய்களாக காட்சியளிக்கின்றன. அப்படி என்றால் இதற்காக போடப்பட்ட மோட்டார் எங்கே, அதிலிருந்த பைப் எங்கே என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர், வேப்பூர் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும், குன்னம் தாலுகா அலுவலகத்திற்கும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் கேள்வி எழுப்பியுள்ளார். மூடப்படாமல் திறந்த வெளியில் இருக்கும் ஆழ்குழாய் கிணறு உடனடியாக மூடுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவுக்கு புகைப்படங்களுடன் வாட்ஸ் அப் மூலம் இந்த புகார் மனுவை வரதராஜன் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் வேப்பூர் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் போர்வெல் குழாய்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல், புதுக்குடிசை, சின்ன வெண்மணி காலனி, சின்ன வெண்மணி ஆகிய பகுதிகளிலும் மூடி இல்லாமல் திறந்த வெளியில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகள் ஏராளமாக இருக்கின்றன.

Tags : village ,Collector ,Collector Greater Venmani , Large white, deep tube wells
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...