×

முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக கிரின்வேஸ் இல்லத்தில் முதலமைச்சருடன் சந்திப்பு நடத்தினார். முதலமைச்சரும், அமைச்சரும் எச்சரிக்கை விடுத்தும் போராட்டம் தொடர்வதால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினர். இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலி பணியிடமாக அறிவிக்கப்படும் என விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசு விடுத்துள்ள கால அவகாசத்திற்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.


Tags : Palanisamy ,Vijayabaskar ,Vijayabaskar Consulting , Health Minister Vijayabaskar, consulting, Chief Minister,Palanisamy
× RELATED மழைக்காலம் மிகவும் சவாலானது; கவனமாக...