×

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவுப் பகுதியான மின்டனாவில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 22 கி.மீ. ஆகும் என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸின் வடகிழக்கு மாகாணமான கோடாபடோவில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக துலுனான் நகரில் இரண்டு பேர் பலியாகினர். இந்நிலையில் மீண்டும் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு என அழைக்கப்படும் பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கியது ஆகும். இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

Tags : earthquake ,The Richter Scale ,Philippines , Philippine, Earthquake, Richter Scale, 6.8 Aug, Record
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்