×

பெரம்பலூர் அருகே கோரையாறு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: வாலிபர்கள் மகிழ்ச்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், வாலிபர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவின் வடக்கு எல்லையாக இமயமலை இருப்பதுபோல், பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக இருப்பது பச்சைமலை. இது பெரம்பலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களை பசுமையால் ஒன்றிணைக்கும் பாலமாக திகழ்கிறது. இந்த பச்சைமலையின் தென்புறம் லாடபுரம் மயிலூற்று அருவியும், மேற்கில் கோரையாறு அருவியும், மலையாளப்ப ட்டி அருகே எட்டெருமைப்பாழி அருவியும், பூலாம்பாடி அருகே இரட்டைப்புறா அருவியும் குதூகலத்தை அதிகரிக்க செய்யும் குற்றால அருவிகளை போல் திகழ்கின்றன.

இதில் கனமழை பெய்தால் மட்டுமே லாடபுரம் மயிலூற்று அருவியிலும், பூலாம்பாடி இரட்டைப்புறா அருவியிலும் தண்ணீர் கொட்டும். ஆனால் சாதாரண மழை பெய்தால்கூட சளைக்காமல், கொட்டித்தீர்க்கின்ற கோரையாறு அருவி யென்றால் எல்லோருக்கும் கொள்ளைப் பிரியம்தான். ஆர்ப்பரித்துக் கொட்டுகிற இந்த அருவிக்கான சீசன், அக்டோபருக்கு பிறகு தான் ஆரம்பிக்கிறது. 30 அடி உயரத்திலிருந்து மூலிகை சாறுகளைக் கலந்தபடி, மூர்க்கத்தனமாய் கொட்டுகின்ற கோரையாறு அருவிக்கு, பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக தொண் டமாந்துறைக்கு சென்று, அங்கிருந்து விஜயபுரம், அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரத்திலுள்ள கோரையாறு கிராமத்திற்குச் செல்லவேண்டு ம். அதுவரைக்கும் அரசு டவுன்பஸ்சும் செல்கிறது.

நீச்சல் தெரிந்தவர் நிலை கொள்ளாமல் நீந்தி சென்று பக்க சுவர்களில் ஏறிநின்று பல்டி அடிப்பது பரவச கா ட்சி. வடகிழக்கு பருவ மழையால் கடந்த சிலதினங்களாக செம்மன்கலந்து செம்புலப்பெயல் நீராகக் கொட் டும் அருவி, இன்னும் சில நாளில் இளநீரைப் போலிருக்கும் என்பதால் வாலிபர்களுக்கு போட்டியாக நடுத்தர வயதினரும் நடைபோடுவது வழக்கமாகும். இந்த அருவி டிசம்பர் மாத இறுதி வரை கொட்டுமென எதிர் பார்க்கப்படுகிறது.

Tags : Koraiyaru Falls ,Perambalur ,Joy , Pouring water,Koraiyaru Falls , Perambalur, joy of the young
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி