×

பைக்மீது மோதாமல் இருக்க முயன்ற போது விபத்து கல்லூரி மாணவி மீது கார் மோதி பள்ளத்தில் பாய்ந்தது: மாணவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி மீது கார்மோதி விபத்து. ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், துறை யூர் தாலுகா, உப்பிலியபுரத்தை சேர்ந்தவர் குமார் மகன் சரண்ராஜ் (21). சுகாதார ஆய்வாளர் பணிக்காக பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று காலை உப்பிலியபுரத்திலிருந்து, கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு காரில் சென்றார். இதற்காக துறையூரிலிருந்து வந்தவர் செஞ்சேரி புறவழிச்சாலை வழியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வதற்காக தண்ணீர் பந்தலுக்கு சென்றுள்ளார். அப்போது, எம்ஜிஆர் நகரிலிருந்து 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்ததால், அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சரண்ராஜ் காரை சாலையின் வலது புறம் வேகமாக இறக்கினார். இதனால் நிலைதடுமாறிய இரு சக்கர வாகன ஓட்டிகள் காரின் பின்னால் மோத, கார், சாலையோரம் சிறுகனூர் அருகேயுள்ள பஸ்சில் ஏற காத்திருந்த, எளம்பலூர் காந்திநகரை சேர்ந்த கல்லூரி மாணவி மேனகா(23) என்பவர் மீது மோதியது. பின்னர் கார் சாலையோர பள்ளத்திற்குள் இறங்கி நின்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி மேனகா படுகாயம் அடைந்தார். இருசக் கரத்தில் வந்த பிரம்மதேசம் அருகேயுள்ள விஆர் எஸ் எஸ்.புரத்தைச் சேர்ந்த காளி ராஜ் (62), இவரது மனைவி தனலட்சுமி(54), ரவிச்சந்திரன் மனைவி சரோஜா(43) ஆகியோர் காயம் அடைந்தனர். 3 பேரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். தகவலறிந்து எளம்பலூர், காந்திநகர், எம்ஜி ஆர்.நகர், இந்திராநகர், தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Bike with Accident ,college student , Accident collides,college student,avoid colliding , bike
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது