பசியால் வாடும் இந்தியா

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய ஒரு விஷயம் இது. ‘குளோபல் பட்டினி மதிப்பீடு’ எனும் ஓர் ஆய்வு ஒவ்வொரு ஆண்டும்

உலகளவில் பசியால் வாடும் நாடுகளைக் கணக்கிட்டு வருகிறது. இப்படி கணக்கிடப் படும் நாடுகளில் நிலவும் சூழலைப் பொறுத்து அதன் உணவுத் தேவையை நிறை வேற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறது இந்த ஆய்வை மேற்கொள்ளும் நிறு வனம்.

இந்த ஆய்வின்படி பசிக்கொடு மையை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு நாட்டுக்கும் புள்ளிகள் கிடைக்கும். எந்த நாடு ஜீரோ புள்ளியை எடுக்கிறதோ அங்கே பசிக்கொடுமை இல்லை. அதிகரிக்கும் புள்ளிகளின் அடிப்படையில் அந்த நாட்டின் பசிக்கொடுமையை நாம் அறிந்து கொள்ளலாம். இதற்காக 117 நாடுகளை ஆய்வை செய்தனர். 30.3 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 102-வது இடம் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் பசியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துவிட்டது.

தவிர, அண்டை நாடு களான பாகிஸ்தான் 94-வது இடத்திலும், பங்களாதேஷ் 88-வது இடத்திலும், நேபாள் 73-வது இடத்திலும் உள்ளதுதான் இணையத்தில் விவாதம் கிளம்ப முக்கிய காரணம். இத்தனைக்கும் 2014-இல் இந்தி யா 55-வது இடத்தில்தான் இருந்தது. ஆனால், அப்போது ஆய்வுக்கு 76 நாடுகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. ‘‘இந்தியாவில் பசிக்கொடுமைக்கு முதன்மையான காரணமே அளவுக்கு அதிகமான மக்கள்தொகைப் பெருக்கம்தான்...’’ என்கிற அந்த ஆய்வு உலகளவில் உள்ள குழந்தைகளில் அதிகமான உணவை வீணாக்குவது இந்தியக் குழந்தைகள்தான் என்றும் சொல்கிறது.

குஜராத், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உணவை வீணாக்குவதில் முக்கிய இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் 6 முதல் 23 மாதமான குழந்தைகளில் 9.6% குழந்தைகளுக்கு சரியான ஊட் டச்சத்துள்ள உணவு கிடைப் பதில்லை. தவிர, உலகளவில் 80 கோடிக்கும் அதிகமானோர் தினசரி உணவு கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்தியா மட்டுமல்ல; உலகளவில் பசிக்கொடுமை பெருகியிருக்கி றது. குறிப்பாக 2010-ம் ஆண்டுக்குப் பின் ரொம்பவே அதிகம்.

Related Stories:

>