×

மறுத்துபோன மனித நேயம் மருத்துவமனைக்கு தள்ளுவண்டியில் முதியவரை அழைத்து சென்ற சகோதரி: உதவிக்கு யாரும் முன்வராத அவலம்

திருக்கனூர்: திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் மல்லிகா. இவர் சுத்துக்கேணியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் சுப்ரமணி (65). இவர் விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது அக்காவான மல்லிகாவை சந்திப்பதற்காக சுத்துக்கேணி வந்துள்ளார். பின்னர், உடல்நிலை சரியில்லாததால் அங்கேயே தங்கினார். பின்னர் அவர் மருத்துவமனை செல்லாததால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. போக்குவரத்து வசதியில்லாத நிலையில், செங்கல் அடுக்கி எடுத்து செல்லும் தள்ளுவண்டியில் சுப்ரமணியை படுக்க வைத்து, அவரது அக்கா மல்லிகா 2 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுப்ரமணியை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது உடலை சொந்த ஊரான  ஒழிந்தியாப்பட்டுக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் உதவியை மல்லிகா நாடினார். அது தமிழக பகுதி என்பதால் புதுவை அரசு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது.

இதுகுறித்து காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் அங்கு வந்து நிலைமை அறிந்து கொண்டனர். பின்னர், போலீசார் கோட்டக்குப்பத்தில் உள்ள சமுக ஜனநாயக கட்சி அகமது அலியின் இலவச ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். அதன் பிறகு சுப்ரமணியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags : sister ,No one ,humanity hospital ,humanities hospital , Sister,took her old man,hospital ,discarded humanities,hospital
× RELATED ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’