×

கும்பகோணம் தனியார் பள்ளி வளாகத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகி இருந்ததால் ரூ.50,000 அபராதம்: நகராட்சி நிர்வாகம்

கும்பகோணம்: கும்பகோணம் தனியார் பள்ளி வளாகத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகி  இருந்ததால் ரூ.50,000 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கோவை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Tags : Dengue mosquitoes ,Kumbakonam ,private school premises ,private school , Kumbakonam, private school, dengue, fine
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...