×

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை எதிரொலி: தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  மழை காரணமாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதில் சிரமம் இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தால் விடுமுறை விடப்படுகின்றன. இந்நிலையில் இன்று தொடர்மழையின் காரணமாக ஒருசில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட பள்ளிளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.

* தொடர் மழையால், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* கனமழையால் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நீலகிரி மாவட்டத்தில் கனமழையை அடுத்து ஊட்டி, குந்தா, குன்னூர் , கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்க இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* விடாது பெய்து வரும் மழையை அடுத்து, கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் தாலுகாக்களான பன்றிமலை, ஆடலூர் பள்ளிகளுக்கும் விடுமுறை. கனமழை காரணமாக கொடைக்கானல் சுற்றுலாதலங்களும் மூடப்பட்டுள்ளது.

Tags : Northeast Monsoon Echoes ,Tamil Nadu ,Districts ,Colleges ,Schools ,Thoothukudi Northeast , Northeast Monsoon, Thoothukudi, Kanyakumari, Holiday
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8...