×

சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையில் இருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை செய்து வருகிறது. இதனால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.  

அப்போது அங்கு பணியில் இருந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் ஆனந்தன் வாகனங்கள் தடையின்றி செல்லும் விதமாக சாலையில் இருந்த பள்ளங்களை கற்கள் மற்றும் மணல் கொட்டி சீரமைத்தார். இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் சென்று வருகின்றனர். இதற்கிடையே காவலர் சாலையை சீரமைத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தலைமை காவலர் ஆனந்தனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கினார்.

Tags : Commissioner ,traffic policeman ,road ,Traffic Police , Congratulations , traffic policeman, commissioner, revamped , road
× RELATED வெள்ளம் பாதித்த குடியிருப்புகளை...