×

தியோதர் டிராபி கிரிக்கெட் ராஞ்சியில் இன்று தொடக்கம்: இந்தியா ஏ - இந்தியா பி மோதல்

ராஞ்சி: தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா ஏ - இந்தியா பி அணிகள் இன்று மோதுகின்றன. பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடர்களில் முக்கியத்துவம் வாய்ந்த தியோதர் டிராபி தொடர் ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நவம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி என மூன்று அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதுகின்றன. இந்தியா ஏ அணிக்கு ஹனுமா விஹாரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா பி அணி பார்திவ் பட்டேல் தலைமையிலும், இந்தியா சி அணி ஷுப்மான் கில் தலைமையிலும் களமிறங்குகின்றன. இன்று காலை 9.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகள் மோதுகின்றன.

நாளை இந்தியா ஏ - இந்தியா சி அணிகளும், நாளை மறுநாள் இந்தியா பி - இந்தியா சி அணிகளும் மோத உள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நவம்பர் 4ம் தேதி இறுதிப் போட்டியில் மோதும். இந்தியா ஏ: ஹனுமா விஹாரி (கேப்டன்), ஆர்.அஷ்வின், அபிமன்யு ஈஸ்வரன், இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), சித்தார்த் கவுல், அமன்தீப் கேர், பார்கவ் மெராய், தேவ்தத் படிக்கல், அபிஷேக் ராமன், ரவி பிஷ்னோய், ஷாபாஷ் அகமது, சந்தீப் வாரியர், ஜெய்தேவ் உனத்கட், விஷ்ணு வினோத். இந்தியா பி: பார்திவ் பட்டேல் (கேப்டன்/ கீப்பர்), பிரியங்க் பாஞ்ச்சால், பாபா அபராஜித், ருதுராஜ் கெயிக்வாட், கிரிஷ்ணப்ப கவுதம், கேதார் ஜாதவ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரூஷ் களரியா, முகமது சிராஜ், ஷாபாஸ் நதீம், பிரித்வி ராஜ், நிதிஷ் ராணா, அனுகுல் ராய், விஜய் ஷங்கர். இந்தியா சி: ஷுப்மான் கில் (கேப்டன்), மயாங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ஆவேஷ் கான், பிரியம் கார்க், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தவால் குல்கர்னி, மயாங்க் மார்கண்டே, அக்சர் பட்டேல், திவேஷ் பதானியா, இஷான் போரெல், ஜலஜ் சக்சேனா, விராத் சிங், சூரியகுமார் யாதவ்.


Tags : clash ,Ranchi ,India A - India B ,Theodore Trophy Cricket ,Start , Theodore Trophy Cricket, Ranchi Today, Start, India A, India B, Clash
× RELATED ராஞ்சியில் இருந்து மும்பை...