×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடர் அரை இறுதியில் ஸ்விடோலினா

ஷென்ஷென்: சீனாவில் நடைபெறும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) தகுதி பெற்றார். ஊதா பிரிவு லீக் ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) நேற்று மோதிய ஸ்விடோலினா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.

இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்துக்கு நீடித்தது. இதே பிரிவில் நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதினார். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பிளிஸ்கோவா கைப்பற்றிய நிலையில், இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆண்ட்ரீஸ்கு போட்டியில் இருந்து விலகினார். இதனால் பிளிஸ்கோவா தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். அவர் தனது கடைசி லீக் ஆடத்த்தில் சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.


Tags : Svitolina ,semi-finals ,WTA Finals Series ,WTA ,Semi-Final ,Finals Series , WTA, Finals Series, Semi-Final, Svitolina
× RELATED ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு