இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திடீர் சென்னை வருகை

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று திடீர் பயணமாக சென்னை வந்தார். இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  நேற்று பிற்பகல் சென்னை வந்தார். சென்னை, அடையாரில் உள்ள ஐஐடி-யில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வெளியில் உள்ள யாருக்கும் அழைப்பு  விடுக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இதையடுத்து இன்று காலை தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி சத்யபிரதா சாஹு மற்றும் சில மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் இன்று மதியம் டெல்லி திரும்புகிறார்.

Tags : Sunil Arora ,India ,Chief Election Commissioner , Chief Election Commissioner of India, Sunil Arora, Madras
× RELATED அகில இந்திய டேபிள் டென்னிஸ் சென்னையில் தொடங்கியது