தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் இன்று ஓய்வு

சென்னை: தீயணைப்புத்துறை டிஜிபியாக உள்ள காந்திராஜன் இன்று ஓய்வு பெறுகிறார். தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக காந்திராஜன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. காந்திராஜன் திருவள்ளூர்  மாவட்டத்தில் 3-10-1959ல் பிறந்தார். பட்டம், பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் இந்திய குடிமைபணி தேர்வில் தமிழக கேடரில் கடந்த 1985ம் ஆண்டு தேர்வானார். ஐபிஎஸ் பயிற்சி  முடித்த அவர், கூடுதல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் தருமபுரி, ஈரோடு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை மாநகர காவல் துறையில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராகவும்  சிறப்பாக பணியாற்றியனர்.

 அதைதொடர்ந்து கடந்த 1999ம் ஆண்டு ஆயுதப்படை மற்றும் ரயில்வேயில் டிஐஜியாகவும் பணியாற்றினர். பிறகு கடந்த 2005ம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்று நுண்ணறிவு பிரிவு மற்றும்  கோவை மாநகர கமிஷனராகவும்  பணியாற்றினர். கடந்த 2010ம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற அவர், பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றினார். அதைதொடர்ந்து 2017ம் ஆண்டு டிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்ற  காந்திராஜன் மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தற்போது தீயணைப்பு துறை டிஜிபியாகவும் பதவி வகித்து வருகிறார். அவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

Related Stories:

>