×

இடைத்தேர்தல் வெற்றி அதிமுக விலை கொடுத்து வாங்கியது: கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ₹10 லட்சம் நிவாரணம்  வழங்கப்படும். வரும் காலங்களில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கவே கூடாது. நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திமுக-காங்கிரசுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல. அதேபோல் அதிமுகவுக்கு கிடைத்தது உண்மையான வெற்றி  அல்ல. அது, மக்களை விலை கொடுத்து வாங்கிய ஒரு வெற்றி. ஆனாலும், மக்களின் ஈர்ப்பை மதித்து ஏற்று கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : victory ,AIADMK ,KS Alagiri , By-election, AIADMK, KSAlagiri
× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்...