×

பள்ளிகளில் இன்று தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி எடுக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை:  இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் அக்டோபர் 31. இவரது பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி  இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாட்டில் ஒற்றுமை நிலவுவதற்கும், பாதுகாப்புக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி  கடைபிடிக்கப்படுகிறது. அதனால் பள்ளிகளில் மாணவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags : schools , Schools, National Integration Day, School Department
× RELATED பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா?