×

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு டிசம்பர் 12ம் தேதி தேர்தல்: பொதுச்சபையில் எம்பி.க்கள் ஆதரவு

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்தது. இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய யூனியனுக்கு பிரக்சிட் தேதியை நீடிப்பதற்கான காலக்கெடுவை 3 மாதம் நீட்டிக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார். இதை ஏற்று, காலக்கெடுவை வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து 2 நாட்களுக்கு முன் ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்தது.

இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலை கிறிஸ்துமசுக்கு முன்னதாக நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்தார். முன்னதாக 3 முறை இதற்கு எம்பி.க்கள் தடையாக இருந்த நிலையில், முன்கூட்டியே டிச.12ல் தேர்தல் நடத்த பிரதமர் முடிவு எடுத்தார். இதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை டிச.12ல் நடத்துவது பற்றிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் இரவு பொதுச்சபையில் நடைபெற்றது. இதில் 438 எம்பி.க்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாகவும் 20 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர். பிரபுக்கள் சபையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கடந்த 4 ஆண்டுகளில் 3 வது முறையாக நடத்தப்படும் பொதுத்தேர்தலாக இது இருக்கும்.


Tags : election ,UK ,MPs ,General Assembly ,parliament , Britain, to parliament, December 12, election
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...