×

பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் இருந்து தனியே கழன்ற பெட்டிகள்

கோவை: பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிவந்த  பாலக்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் இருந்து பெட்டிகள் தனியே  கழன்று சென்றது. இதனால், பயணிகள் அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று மதியம் 3 மணியளவில் பாலக்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 600 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த ரயில் பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம்  வழியாக இயக்கப்படும் இந்த ரயில் சுமார் 4 மணியளவில் கொல்லங்கோடு அருகே சென்றது.

அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாக ரயில் இன்ஜினில் இருந்து, ரயில் பெட்டிகள் தனியாக கழன்று சென்றது. இதைக்கண்ட பயணிகள் அச்சத்தில் அலறினர்.  ரயில் மெதுவாக சென்றபோது  இந்த சம்பவம் நடந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 600க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பினர். யாருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள், ரயில் பெட்டிகளை இன்ஜினோடு இணைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் பெட்டிகளை இன்ஜினோடு சரியாக இணைக்காத காரணத்தால் கழன்றிருக்கலாம், இது பற்றி விசாரணை நடந்து வருகிறது என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

Tags : Palakkad ,Chennai ,Express Train Engine Uncategorized Boxes , Uncategorized Boxes ,Palakkad - Chennai Express, Train Engine
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது