விரைவில் நாடு திரும்புவார் ராகுல்காந்தி : காங். தலைமை தகவல்

புதுடெல்லி: ‘தியான பயிற்சிக்காக இந்தோனேஷியா சென்றுள்ள ராகுல் காந்தி, விரைவில் நாடு திரும்புவார்,’  காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி, மன அமைதிக்கான தியான பயிற்சியை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். தற்போது அவர் இந்தோனேஷியா சென்றுள்ளார்.

இது தொடர்பாக காங். செய்தி தொடர்பாளர் சுர்ஜே வாலா கூறுகையில், தியானப் பயிற்சிக்காக ராகுல் காந்தி அவ்வபோது வெளிநாடு செல்வது வழக்கம். அதன்படி, தற்போது இந்தோனேஷியா சென்றிருக்கும் அவர் விரைவில் நாடு திரும்புவார். நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை, வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றுக்கு எதிராக வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கும் போராட்டம் குறித்து ராகுல் தலைமையில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் போராட்டங்களில் ராகுல் அல்லது தற்போதைய தலைவர் சோனியா பங்கேற்பார்கள்,’’ என்றார்.

Tags : Rahul Gandhi , Rahul Gandhi returns soon, Head Info
× RELATED குடியுரிமை சட்டத் திருத்த மசோதா...