×

காஷ்மீர் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்தனர் : அரசு ஆலோசகர் விஜயகுமார் பேட்டி

சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான விஜயக்குமார் 1975ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை தமிழக காவல் துறை மற்றும் மத்திய அரசு பணி ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.  குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிறப்பு பாதுகாப்பு படை,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை ஐஜி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற பிறகு இந்திய அரசின் உள்துறையின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
 
இதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு காஷ்மீர் அரசின் ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டார். இவரோடு சேர்ந்து பி.பி.விலாஸ் என்பவரும்  ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. காஷ்மீரில் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தியது, காஷ்மீரை இரண்டாக பிரித்தது உள்ளிட்ட காஷ்மீரின் முக்கிய காலங்களில் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் காஷ்மீர் அரசின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இந்த பணி அனுபவம் தொடர்பாக இன்று  ஓய்வு பெறும் விஜய குமார் ஐபிஎஸ் தினகரன் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்  கூறியதாவது.
 
நான் காஷ்மீர் ஆலோகராக மட்டும் செயல்படவில்லை. எனது கட்டுப்பாட்டில் உள்துறை. வனம், சுகாதாரம், தகவல் தொழில்நுட்ப துறை, சிவில் ஏவியேஷன், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் இருந்தன. என்னுடைய பணிக் காலத்தில் காஷ்மீரின் பல பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளேன். அனைத்து ஜில்லாக்களுக்கு பயணம் மேற்கொண்டு மக்களிடம் கலந்துரையாடியுள்ளேன். பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். இதே போன்று காஷ்மீர் அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Vijayakumar ,Kashmir ,government counsel , Kashmir officials , full co-operation, government counsel Vijayakumar
× RELATED கேளம்பாக்கம் அருகே மனைவி கழுத்து...