×

உலகின் 100 முன்னனி சிஇஓ-க்கள் பட்டியல் வெளியீடு: டாப் 10 இடங்களில் 3 இந்தியர்கள்

வாஷிங்டன்: உலகின் டாப் 10 தலைமை நிர்வாக இயக்குநர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகின் முன்னணி பிசினஸ் பல்கலைக்கழகமான ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் சர்வதேச அளவில் சிறந்த, வளர்ச்சி கொண்ட,  வெற்றிகரமான சிஇஓ-க்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் 100 முன்னனி சிஇஓ-க்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் டாப் 10 இடங்களில் 3 இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.

6-வது இடத்தில் அடோப் சிஇஓ சாந்தனு நாராயண், 7-ம் இடத்தில் மாஸ்டர்கார்டு சிஇஓ அஜய் பங்கா மற்றும் 9-ம் இடத்தில் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாடெல்லா ஆகிய மூவரும் உள்ளனர். இதை தவிர, டாப் 100 பட்டியலில் 89-வது  இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த பியூஷ் குப்தா உள்ளார். மற்றபடி ஆப்பிள் சிஇஓ டிம் குக் 62-வது இடத்திலும் டிஸ்னி சிஇஓ ராபர்ட் ஐகர் 55-வது இடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் நிதி சார்ந்து மட்டும்  தேர்ந்தெடுக்கப்படாமல் சுற்றுச்சூழல் அக்கறை, சமூக அக்கறை, மேலாண்மைத் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : CEOs ,World ,Indians , List of World's 100 Leading CEOs: 3 Indians in Top 10
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்