×

காணாமல்போன நாட்களில் எங்கிருந்தார் என கூறினால் மட்டுமே முகிலனுக்கு ஜாமீன் பற்றி பரிசீலிக்கப்படும் : உயர்நீதிமன்றம்


மதுரை : காணாமல் போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார் என்பது குறித்து தெளிப்படுத்தினால் மட்டுமே ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று முகிலனிடம் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மாயமான முகிலன் பற்றி விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், பெண் ஒருவரை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பாலியல் வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருக்கும் முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, முகிலனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது என்று அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முகிலன் மீண்டும் தலைமறைவாக வாய்ப்புள்ளதால் வழக்கு விசாரணை பாதிக்கப்ப்டும் என்று வழக்கறிஞர் வாதிட்டார்.  இதனை பதிவு செய்த நீதிபதி, ஏற்கனவே மாயமாகி இருந்த முகிலன் கடத்தப்பட்டரா அல்லது தலைமறைவானாரா என்று கேள்வி எழுப்பினார். தலைமறைவான நாட்களில் முகிலன் எங்கிருந்தார் என்றும் நீதிபதி வினவினார். இதுகுறித்து முகிலன் தரப்பில் தெளிவுப்படுத்தினால் மட்டுமே ஜாமீன் வழங்க பரிசீலிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Tags : Mukhilan ,disappearance ,High Court , Mukhilan, Bail, High Court, Justice
× RELATED தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி...