×

அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி

அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் புதிய ஏவுகணையை ரஷியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
ரஷியாவால் உருவாக்கப்பட்ட க்நாஸ் விளாடிமிர் அணுசக்தி நீர்மூழ்கி (Knyaz Vladimir) கப்பல், அந்நாட்டு கடற்படையின் வடக்கு படைப்பிரிவில் வரும் டிசம்பர் மாதம் சேர்த்து கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளை கடல் பகுதியில் அந்த நீர்மூழ்கியில் இருந்து புலுவா (Bulava) எனப்படும் புதிய ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ காட்சியை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.


Tags : continent , Nuclear submarine, continent, missile, test, success
× RELATED அஜித் குமார் படத்தில் ரெஜினா