×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்தும் காளை வளர்ப்போர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் காளைகள் வளர்ப்போர் காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீக்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமாகன ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் கிராமத்தினர் சார்பில் நடத்தப்பட்டது. காளைளும் தரமானதாகவும் உள்ளது.
இந்நிலையில் காளை வளர்போர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பரபரப்பாக இயங்கி வந்தனர்.


காளைகளும் பரபரப்பாக காணப்பட்டது. தற்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறாமல் இருப்பதால் காளைகள் உரிமையாளர்களின் வீடுகளில் தொடர்ந்து ஓய்வு வெடுத்து வருகிறது.காளையின் உரிமையாளர்கள் பல்வேறு பணிகளில் ஈபட்டுள்ளனர். மேலும் காளைகளுக்கு தவறாமல் தீவனங்கள் வைப்பது, உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய மருத்துவர்களை அணுகி அதற்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்து வருகின்றனர். மேலும் வாரம் ஒரு முறை காளைகளுக்கு பயிர்சியும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்னு சில மாதங்களில் மீண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதால் காளைகளை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைக்கு முக்கியமானது கால்கள்தான்.

அந்த கால்களின் கீழ் குழம்பு பகுதி அதிகமாக வளர்ந்துவிட்டால் காளைகள் ஓடும்போது இடரிவிட்டு விழுவதற்கு வாயப்பு ஏற்படும். இதேபோல் வால் பகுதியில் அதிக அளவு முடி வளர்ந்துவிட்டால் அது தரையில் உரிசி காளைக்கு காயம் ஏற்படும் வாயப்பு உள்ளது. இதனால் தற்போது காளை வளர்ப்போர் காளைகளின் கால் பகுதியில் உள்ள குழப்பு பகுதியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விளாப்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பர் ஈடுபடுகிறார். இவர் காளைகளின் கால் பகுதியில் தேவையற்றவைகளை நீக்கிவிட்டுகிறார். மேலும் தேவையான காளைகளுக்கு லாடம் கட்டி விடுகின்றனர்.

இதேபோல் வால் பகுதியில் உள்ள முடிகளை வெட்டி சரி செய்கிறார். இந்த பணிக்கு ஒரு காளைக்கு ரூ.500 முதல் ரூ.ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். இதனால் காளைகள் ஜல்லிக்கட்டில் ஆபத்து இன்றி வேகமாக வீரர்களின் பிடியில் இருந்து தப்பிக்கும். மேலும் காளைகளுக்கு இடறி விழும் நிலை ஏற்படாது என்று காளை வளர்ப்போர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : Cattle Breeders Preparation of Bulls for Jallikattu ,Pudukkottai District ,Pudukkottai District Bulls , jallikattu,Pudukkottai ,Bulls
× RELATED கந்தர்வகோட்டை பகுதிகளில் தீயணைப்புதுறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை