×

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்குமாறு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். சிதம்பரத்தை மேலும் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. அமலாக்கத்துறை சார்பில் சிதம்பரத்தின் தற்போதைய உடல்நிலை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

வயிற்று வலி உள்ளிட்ட சில பிரச்னைகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டுமே வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறை உணவு ஒத்துக்கொள்ளாததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 4 முறை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ப.சிதம்பரம் வயிற்று வலி காரணமாக ஆர்.எம்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே ப.சிதம்பரம் குரோன் எனப்படும் ‘குடல் அழற்சி’ நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Chidambaram , Aieneks, PC Chidambaram,petition,seeking,interim bail,media case
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...