×

நீல நிற நகரம்

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் பார்க்க விரும்பும் இடம் எது தெரியுமா? என்று கேட்டால் ‘தாஜ்மகால்’ என்று உடனே பதில் வரும். ஆனால், அதுதான் இல்லை. சமீபத்தில் booking.com என்ற பயண டிக்கெட்கள் புக் பண்ணித்தரும் இணையதளம் ஓர் ஆய்வைச் செய்தது. அதில் உலகளவில் வளர்ந்து வரும் டாப் 10 சுற்றுலாத்தலங்களைப் பட்டியலிட்டுள்ளது. அந்த பத்துக்குள் இந்தியாவின் ஜோத்பூர் இடம் பிடித்து அசத்தியுள்ளது. தாஜ்மகாலைவிட ஜோத்பூரைக் காணவே அதிகமான சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனராம். அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா, வியட்நாமின் நின் பின் போன்ற உலகப்புகழ்பெற்ற தலங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. உலகின் வண்ணமயமான நகரங்களில் ஒன்று ஜோத்பூர், இங்கிருக்கும் நீல நிற வீடுகளுக்காக நீல நிற நகரம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

ஜோத்பூரில் வீற்றிருக்கும் பழமையான கோட்டைகள், அரண்மனைகள், கோயில்களைப் பார்வையிட லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் விரும்புகின்றனர். இதுபோக அங்கே கிடைக்கும் உணவு மற்று ஷாப்பிங்கிற்காகவும் ஜோத்பூர் வர ஆசைப்படுகின்றனர் என்கிறது  booking.com. இதுபோக ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் இதுவே. அத்துடன் எய்ம்ஸ், ஐஐடி போன்ற தரமான கல்வி நிறுவனங்களும் ஜோத்பூருக்குப் பெருமை சேர்க்கிறது. நாவல் படிப்பதைப் போன்ற ஓர் அனுபவத்தை ஜோத்பூர் நகரம் தருகிறது என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். 2020-இல் உலகளவில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஓர் இடமாகவும் ஜோத்பூர் இருக்கப்போகிறது என்பதுதான் இதில் ஹைலைட்.


Tags : city , Tourist, Jodhpur, Blue, City
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு