×

குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு மனசாட்சியுடன் முதல்வர் பதில் சொல்ல வேண்டும் : ஸ்டாலின் அறிக்கை

சென்னை : குழந்தை சுஜித் மரணத்தில் மக்களின் மனதில் எழுந்துள்ள அத்தனை கேள்விகளுக்கும் முதல்வர் மனசாட்சியுடன் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தையின் உயிரை காவுக்கொடுத்த தவறுகள் என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுப்பப்பட்டுள்ள 8 கேள்விகளுக்கு முதல்வர்  பதில் சொல்வாரா என்று அவர் வினவி இருக்கிறார்.

உயிருக்கு போராடும் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் வைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சி தலைவர் சோதனை முறையில் மீட்பு பணிகளை செய்தது ஏன் என்று பாறை இருந்த இடத்தில் அமைச்சர் இரண்டாவது கிணறு தோண்ட உத்தரவிட்டது ஏன் ? ஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்கும் அனுபவமே இல்லாத தேசிய பேரிடர் மீட்பு படையை மீட்பு பணியில் ஈடுபடுத்தியது ஏன் ? என் ஆங்கில நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளை ஸ்டாலின் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையை அழைத்து நேரத்தை விரையம் செய்ததற்கு பதிலாக  ராணுவத்தை அழைக்காதது அதிமுக அரசின் தோல்வி தானே என்ற கேள்வி இயல்பாக எழத்தானே செய்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் இன்றில்லாமல், மாநில பேரிடர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பதில் என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இவை அனைத்தும் பொய் என்று ஒரே போடாக போட்டுவிட்டு பதுங்கிக் கொள்ளாமல், இந்த கேள்விகளுக்கு யார் மீதும் சினம் கொள்ளாமல் குளறுபடிகளை மனசாட்சியுடன் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  


Tags : Baby Sujith ,Stalin ,death ,CM , Child, Sujith, Stalin, DMK, Arrest, National Disaster Recovery
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...