×

மேற்கு, கிழக்கு நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியர் மூளை ரொம்ப சிறுசு!

*ஆய்வில் புதிய தகவல்

ஐதராபாத் :  மேற்கு, கிழக்கு நாடுகளின் மக்களோடு ஒப்பிடும்போது இந்தியர்களின் மூளையின் அளவு சிறிதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தியர்களின் மூளை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் இந்தியர்களின் மூளை வரைபடத்தை  அவர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த ஆய்வு அறிக்கை, ‘நியூராலஜி இந்தியா’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வில், மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்களின் மூளை சராசரியாக உயரம், அகலம் மற்றும் அளவு ஆகியவற்றில் சிறியதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஒருவகையில் நல்லதுதான் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். காரணம், மூளையின் அளவு சிறியதாக இருப்பதன் மூலமாக, ‘அல்சைமர்’ எனப்படும் ‘மறதி நோய்’ மற்றும் மூளை தொடர்பான நோய்களை மு்ன்கூட்டியே கண்டறிவதற்கு உதவியாக இருக்கும் என்று இந்த திட்டத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜெயந்தி சிவகாமி கூறியுள்ளார்.

* இந்தியர்கள் மூளையின் சராசரி நீளம் 160 மிமீ, அகலம் 130 மிமீ, உயரம் 88 மிமீ
* மேற்கத்திய நாட்டினர் மூளையின் சராசரி நீளம் 181 மிமீ, அகலம் 142 மிமீ, உயரம் 111 மிமீ.
* சீனர்கள் மூளையின் சராசரி நீளம் 175 மிமீ, அகலம் 145 மிமீ, உயரம் 100 மிமீ.
* கொரியாவை சேர்ந்தவர்கள் மூளையின் நீளம் 160 மிமீ, அகலம் 136 மிமீ, உயரம் 92 மிமீ.
* மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை.
* மனித மூளை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
பிறக்கும்போது இருக்கும் அளவை விட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகி, வயது முதிர்ந்ததும், மூளையின் எடையும் குறையத் தொடங்குகிறது.


Tags : Indian ,countries ,West , Brain Size,Indians,West, East Countries,Hyderabad
× RELATED சராசரியை காட்டிலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்